வேலைவாய்ப்பு முகாம்


வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வருகிற 13-ந் தேதி காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

எனவே விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதன்மூலம் மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்ப படிவம், போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் ஆகியவையும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story