சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

ஆலங்குளத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவர் வில்லியம் தாமஸ் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் நகர தலைவர் செல்லையா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலடி சங்கரையா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, வழக்கறிஞர் பிரிவு மாநில துணை தலைவர் பால்ராஜ், காங்கிரஸ் வட்டார பொறுப்பாளர் ரூபன் தேவதாஸ், இளைஞரணி தலைவர் லெனின், ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர் வேல்குமார் ராமசாமி, மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ராஜாராம், நகர செயலாளர் லிவிங்ஸ்டன் விமல், யேசுதாசன், ஜோசப், மாடக்கண்ணு, ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் பிரகாஷ், அரவிந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.