அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உபகரணங்கள்

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உபகரணங்கள் எம்.ஆர்.எப். நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
அரக்கோணம் எம்.ஆர்.எப். நிறுவனம் சார்பில், சி.எஸ்.ஆர். திட்டம் மூலம் அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டிடம் ஒப்படைப்பு, மேஜை மற்றும் பெஞ்ச், கம்ப்யூட்டர்கள் மற்றும் பிரிண்டர் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் பொது மேலாளர் ஜான் டேனியல், அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலர் முனி சுப்பராயன், பள்ளி தலைமை ஆசிரியர் கரிமுல்லா, ஊராட்சி தலைவர் சுந்தரம், துணைத்தலைவர் பாஸ்கர், கவுன்சிலர் நரேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் துரைசாமி, மணி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜி.மணி, ரோட்டரி நிர்வாகி மணிகண்டன், எம்.ஆர்.எப். என்ஜினீயரிங் பிரிவு துணைப்பொது மேலாளர் எல்வின், பாதுகாப்புத்துறை அலுவலர் பிரசாத் பிள்ளை, மக்கள் தொடர்பு அலுவலர் கஜேந்திரன் மற்றும் எம்.ஆர்.எப். நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.