முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்


முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு (வயது 28) சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதனை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ வீரர் கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வகையில் போலீசார் தங்களது நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், பா.ஜனதாவினர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தென்காசி மாவட்ட ஜெய் ஜவான் நலச்சங்கம் மற்றும் தென்காசி பட்டாளம் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த சங்கங்களின் தலைவர் பிச்சுமணி, செயலாளர் சமுத்திரவேல், கவுரவ தலைவர் மணி, ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், பா.ஜனதா முன்னாள் ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், நகர தலைவர் மந்திரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story