வியாபாரியிடம் பணம் பறிப்பு


வியாபாரியிடம் பணம் பறிப்பு
x

வியாபாரியிடம் பணத்தை பறித்து சென்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி ஆறுமுகநாடார் ரோட்டை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 28). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு தனது உறவினருடன் சிவகாசி-வெம்பக்கோட்டை ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி விக்னேஷ்வரன் சட்டை பையில் வைத்திருந்த ரூ.330-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்னேஷ்வரன் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story