விஷம் குடித்து விவசாயி தற்கொலை

அரியான்கோட்டை பகுதியில் குடும்ப தகராறில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை
இளையான்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் அரியான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து(வயது 45). விவசாயி. இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி இந்திராணி(43) சாலைக்கிராமம் போலீசில் புகார் செய்தார். அதில் தங்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. எனவே தனது கணவருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததால் அதை நான் தட்டி கேட்டதால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து சாலைக்கிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரிட்டோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story