விளைநிலத்தில் திடீரென ஏற்பட்ட நீர்க்குமிழிகளால் விவசாயிகள் அச்சம்

பொறையாறு அருகே கழனிவாசலில் விளைநிலத்தில் திடீரென ஏற்பட்ட நீர்க்குமிழிகளால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இதனால் ெகயில் நிறுவன அதிகாாகிள் ஆய்வு செய்து எரிவாயு கசிவு ஏற்படவில்லை என தெரிவித்தனர்.
பொறையாறு:
பொறையாறு அருகே கழனிவாசலில் விளைநிலத்தில் திடீரென ஏற்பட்ட நீர்க்குமிழிகளால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இதனால் ெகயில் நிறுவன அதிகாாகிள் ஆய்வு செய்து எரிவாயு கசிவு ஏற்படவில்லை என தெரிவித்தனர்.
விளைநிலத்தில் நீர்க்குமிழிகள்
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே கழனிவாசல் கிராமத்தை சேர்ந்த சுதாகர், சரவணன் ஆகியோருக்கு சொந்தமான 2½ ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தனர்.இந்த நிலையில் நேற்று காலை இவர்களது வயலில் திடீரென பூமியில் இருந்து நீர்குமிழிகள் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் அச்சம்
இதை பார்த்த விவசாயிகள் சேற்றைக் கொண்டு நீர்க்குமிழியை அடைத்துள்ளனர். ஆனால் நீர்க்குமிழி தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.இதனால் தங்கள் பகுதி விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதா? என விவசாயிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
எரிவாயு கசிவு ஏற்படவில்லை
தகவல் அறிந்த குத்தாலம் கெயில் நிறுவன தலைமை மேலாளர் நரசிம்மன் தலைமையில் குத்தாலம் மற்றும் காரைக்கால் கெயில் நிறுவன தொழில்நுட்பக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். . இதில் எரிவாயு கசிவு ஏற்படவில்லை என்று உறுதிபடுத்தினர். விவசாயிகள் அச்சமடைய தேவையில்லை என்று தெரிவித்தனர்.வேளாண்மைதுறை அதிகாரிகள் கூறுகையில் நீர்குமிழிகள் போன்று கொப்பளிப்பதால் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை அறுவடை முடிந்தவுடன் அந்த பகுதியில் மண்பரிசோதனை செய்து ஆய்வு செய்யப்படும்.
பரபரப்பு
எனவே விவசாயிகளுக்கு எந்த பாதிப்புமில்லை என்று தெரிவித்தனர்.. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். இதனால் கழனிவாசல் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.