விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வேதாரண்யம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் வட்டார அளவிலானவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தாசில்தார் ஜெயசீலன், சமூக நலதிட்ட தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார்கள் வேதையன், மாதவன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவி, நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், வேளாண்மை அலுவலர் நவீன்குமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை, செடி, கொடிகளை அகற்றி தூர்வார வேண்டும். முல்லை பூ விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பா அறுவடை பணி தொடங்கி விட்டதால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் ஜெயராஜ்பவுலின் தெரிவித்தார்.