உசிலம்பட்டி அருகே கண்களில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்


உசிலம்பட்டி அருகே கண்களில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்
x

உசிலம்பட்டி அருகே கண்களில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை

உசிலம்பட்டி,

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய கோரியும், கரும்பு மற்றும் நெல்லுக்கு உரிய விலை வழங்க கோரியும், விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், முல்லை பெரியாற்றில் 152 அடி நீர் தேக்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 16 மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 21 வது நாளாக நடைபெறும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக உசிலம்பட்டி அருகே திருமங்கலம் விலக்கு பகுதியில் விவசாயிகள் கண்ணில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உசிலம்பட்டி 58 கால்வாய் தொட்டிப்பாலத்தை பாதுகாக்க வேண்டும், தொட்டிப்பாலத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story