கிராமங்களில் உழவுப்பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

பருவ மழையை எதிர்பார்த்து பனைக்குளம் அருகே உள்ள பல கிராமங்களில் உழவுப் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பனைக்குளம்,
பருவ மழையை எதிர்பார்த்து பனைக்குளம் அருகே உள்ள பல கிராமங்களில் உழவுப் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பருவமழை சீசன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனில் தான் ஓரளவு மழை பெய்யும். இந்த பருவமழை சீசனை எதிர்பார்த்தே மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டுவார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள பொன்குளம், குலசேகரக்கால், அத்தியூத்து, கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல கிராமங்களிலும் நெல் விவசாய பணிகளுக்காக விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு பணியில் விவசாயிகள் தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றனர்.
உழவு பணி தீவிரம்
இது குறித்து அத்தியூத்து கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் கூறும்போது, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் நெற்பயிர் விளைச்சல் இல்லாமல் நெல் விவசாயம் அதிகமாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டாவது பருவமழை சீசனில் நல்ல மழை இருக்கும் என்று எதிர்பார்ப்பிலேயே நெல் விவசாய பணிகளை தொடங்குவதற்காக விவசாய நிலங்களில் உழவு பணியை தொடங்கி உள்ளோம் என்றார்.