விஷம் குடித்து தந்தை தற்கொலை

விஷம் குடித்து தந்தை தற்கொலை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நாலாம்தேதி கரம்பயத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது51). இவரது மகன் சதீஷ்குமார் (23). இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. ஆனால் சதீஷ்குமார் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். சில நேரங்களில் வேலைக்கு சென்றாலும் ஊதியத்தை வீட்டில் கொடுப்பதில்லை. இதனால் குடும்ப செலவு அனைத்தையும் கந்தசாமியே பார்த்து வந்தார். இதுதொடர்பாக அடிக்கடி தந்தை-மகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கந்தசாமி விஷத்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிைலயில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.