புனித குழந்தை தெரசாள் ஆலய 79-வது பங்கு திருவிழா


புனித குழந்தை தெரசாள் ஆலய 79-வது பங்கு திருவிழா
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புனித குழந்தை தெரசாள் ஆலய 79-வது பங்கு திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி செஞ்சை புனித குழந்தை தெரசாள் ஆலய 79-வது பங்கு திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு வந்த தமிழக ஆயர் பேரவையின் துணைத்தலைவரும், தர்மபுரி மறை மாவட்ட ஆயருமான லாரன்ஸ் பயசை ஏசுவுக்காய் இளைஞர் இயக்கத்தினர் வரவேற்றனர். செஞ்சை பங்கு தந்தை ஜான்பிரிட்டோ சந்தனமாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் திருவிழா திருப்பலி நடந்தது. திருப்பலி முடிவில் புனித தெரசாள் உருவம் தாங்கிய தேர் வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளில் பவனி வந்தது. நேற்று திருவிழா திருப்பலியும், குழந்தைகளுக்கு திருவிருந்தும் நடைபெற்றது. மேலும் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைந்தது. இந்த விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story