மாரண்டஅள்ளியில் மஞ்சு விரட்டு விழா
தர்மபுரி
மாரண்டஅள்ளி:
மாட்டு பொங்கலையொட்டி மாரண்டஅள்ளி சத்திரம் தெரு மெயின் ரோட்டில் மஞ்சு விரட்டு விழா நடந்தது. இதில் வேங்குதெரு, சந்தை வீதி, பைபாஸ் ரோடு, ஆணங்கிணற்று தெரு, முகமதியர் தெரு, சொவத்தம்பட்டி என பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. தொடர்ந்து காளைகள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அடக்கினர்.
இதில் மாடுகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். விழாவையொட்டி மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Next Story