சத்தி வரதம்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிழாகம்பத்தை சுற்றி இளைஞர்கள் ஆட்டம்


சத்தி வரதம்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிழாகம்பத்தை சுற்றி இளைஞர்கள் ஆட்டம்
x

சத்தி வரதம்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கம்பத்தை சுற்றி இளைஞர்கள் ஆட்டம் ஆடினா்.

ஈரோடு

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து 20 அடி உயர கம்பம் கொண்டு வரப்பட்டு் கோவில் முன்பு நடப்பட்டது. அப்போது பூசாரி அம்மனுக்கும், கம்பத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் இளைஞர்கள் இரவு 9 மணி முதல் 12 மணி வரை கம்பத்தை சுற்றி ஆடி மகிழ்ந்தார்கள்.

நேற்று கம்பத்துக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா வருகிற 25-ந் தேதி காலையில் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள். அன்று இரவு 8 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டு பவானி ஆற்றில் கொண்டு சென்று விடப்படுகிறது. வருகிற 1-ந் தேதி நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


Next Story