6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் 12-ந் தேதி தொடங்குகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு வருகிற 12-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 12-ந் தேதி (புதன்கிழமை) தமிழ், 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆங்கிலம், 19-ந் தேதி (புதன்கிழமை) கணிதம், 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அறிவியல், 24-ந் தேதி (திங்கட்கிழமை) சமூக அறிவியல், 27-ந் தேதி (வியாழக்கிழமை) உடற்கல்வி தேர்வுகள் நடைபெறுகிறது.
6 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், 7 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். தேர்வுகளை தலைமை ஆசிரியர்கள் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காதபடி நடத்திட வேண்டும்.
வினாத்தாள் எண்ணிக்கையினை நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணி அளவில் வினாத்தாள் கட்டு காப்பு மையத்தில் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை 8 மணி அளவில் அன்றைய தேர்வுக்குரிய வினாத் தாள்களை பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்களுக்கு திருப்புதல் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்துள்ளார்.