பஸ் நிலையத்தில் நின்ற மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம்
தக்கலையில் பஸ் நிலையத்தில் நின்ற மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம்
கன்னியாகுமரி
தக்கலை,
தக்கலை பஸ் நிலையத்தின் உள்ளே மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் பஸ் நிலையத்தில் வரும் அரசு பஸ்கள் மற்றும் பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு அனுமதியின்றி நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அவ்வப்போது அபராதம் விதித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் போக்குவரத்து சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி நிறுத்தி வைத்திருந்த 9 மோட்டார் சைக்கிள்களுக்கு தலா ரூ.100 வீதம் ரூ.900 அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story