பரமக்குடி அருகே கண்மாயில் தீ விபத்து


பரமக்குடி அருகே கண்மாயில் தீ விபத்து
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே கண்மாயில் தீ விபத்து ஏற்பட்டது.

ராமநாதபுரம்

பார்த்திபனூர்,

பரமக்குடி அருகே உள்ள உனங்குளம் கிராமத்தில் கண்மாய் உள்ளது. அந்த கண்மாயில் காட்டு கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. அங்கு சமீபத்தில் வெட்டப்பட்ட காட்டு கருவேல மரங்கள் காய்ந்த நிலையில் இருந்தது. அதில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அங்கு இருந்த மரங்கள் மற்றும் செடிகளில் தீ பற்றி மளமளவென எரிந்தது. இதுகுறித்து அறிந்த பரமக்குடி தீயணைப்பு துறையினர் விரைந்து ெசன்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


Next Story