கொசுவர்த்தி சுருள் பட்டு தீப்பிடித்ததில் உடல் கருகி முதியவர் சாவு; நம்பியூரில் பரிதாபம்

நம்பியூரில் கொசுவர்த்தி சுருள் பட்டு தீப்பிடித்ததில் உடல் கருகி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
நம்பியூர்
நம்பியூரில் கொசுவர்த்தி சுருள் பட்டு தீப்பிடித்ததில் உடல் கருகி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
தீ விபத்தில் உடல் கருகியது
நம்பியூர் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் தைலாஞ் செட்டியார் (வயது 71). அவருடைய மனைவி ராசம்மாள் (70). இவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 பேரும் தூங்க சென்றனர். அப்போது அவர்கள் படுக்கைக்கு அருகே கொசுவர்த்தி சுருளை பற்ற வைத்து இருந்தனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் 2 பேரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது கொசுவர்த்தி சுருளில் உள்ள தீ பொறி போர்வை மீது பட்டு தைலாஞ் செட்டியாரின் உடல் மீது பிடித்து எரிந்தது. இதில் உடல் கருகிய நிலையில் அவர் அலறி துடித்தார்.
சாவு
சத்தம் கேட்டு அருகே தூங்கி கொண்டிருந்த அவருடைய மனைவி ராசம்மாள் திடுக்கிட்டு எழுந்தார். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே கணவர் மீது எரிந்த தீயை அணைத்தார். பின்னர் இதுபற்றி பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது மகளிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அவர் அங்கு சென்று தைலாஞ்செட்டியாரை மீட்டு் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தைலாஞ் செட்டியார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.