தீத்தொண்டு நாள் அனுசரிப்பு


தீத்தொண்டு நாள் அனுசரிப்பு
x

தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் ஒரு வாரம் தீத்தொண்டு நாள் வாரம் அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி தீயணைப்பு பணிகளின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அதிகாரி சகாயராஜ், போக்குவரத்து அதிகாரி முருகன் ஆகியோர் தீயணைப்பு வீரர்கள் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். வருகிற 20-ந் தேதி வரை தீ விபத்து தடுப்பு குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்படும் என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.


Next Story