பட்டாசு லாரி விபத்தில் சிக்கியது; டிரைவர் பலி


பட்டாசு லாரி விபத்தில் சிக்கியது; டிரைவர் பலி
x

பட்டாசு லாரி விபத்தில் சிக்கியது; டிரைவர் பலி

மதுரை

மேலூர்

சிவகாசியில் இருந்து திருச்சிக்கு பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மதுரை மாவட்டம் மேலூரில் நான்கு வழி சாலையில் வந்து ெகாண்டிருந்தது. லாரியை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா புளியங்குடியை சேர்ந்த திருமலைக்குமார்(வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். மதுரை மாவட்டம் மேலூரில் நான்கு வழி சாலையில் காலை 5 மணி அளவில் மழை தூரல் விழுந்தபோது அந்த லாரி வந்துள்ளது. நாவினிப்பட்டி பாலம் அருகில் வந்தபோது முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத ஒரு லாரி, திடீரென பிரேக் போட்டதால் பட்டாசு ஏற்றி வந்த லாரி அதன் மீது மோதியது. இந்த விபத்தில் பட்டாசு லாரியின் டிரைவர் திருமலைக்குமார் உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார். நான்கு வழி சாலை விபத்து மீட்பு குழு கார்த்திக், மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகஜேந்திரன், போலீஸ் ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டு விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.


Related Tags :
Next Story