தூத்துக்குடி அணிக்கு முதல் பரிசு


தூத்துக்குடி அணிக்கு முதல் பரிசு
x

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி அணி முதல்பரிசு பெற்றது

தூத்துக்குடி

தூத்துக்குடி:

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி அணி முதல்பரிசு பெற்றது.

கைப்பந்து போட்டி

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் கைப்பந்து போட்டிகள் தூத்துக்குடி ஜிம்கானா கிளப் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆண்கள் பிரிவில் 15 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.

ஆண்கள் பிரிவில் கால்டுவெல் வாலிபால் கிளப் முதல் இடத்தையும், தூத்துக்குடி ஜிம்கானா கிளப் 2-வது இடத்தையும் பிடித்தன.

பெண்கள் பிரிவில் தருவைகுளம் செயின்ட் மைக்கேல் வாலிபால் கிளப் அணி முதல் இடத்தையும், கோவில்பட்டி இந்தியன் ஸ்டார் வாலிபால் கிளப் அணி 2-வது இடத்தையும் பிடித்தன.

பரிசளிப்பு விழா

வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க முன்னாள் தலைவரும், ஜிம்கானா கிளப் முன்னாள் தலைவருமான ஜோபிரகாஷ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக துணைத்தலைவர் ஏ.குருசாமி வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி கூடைப்பந்து கிளப் செயலாளரும், ஜிம்கானா கிளப் பொருளாளருமான எஸ்.நார்டன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆண்கள், பெண்கள் அணிக்கு கோப்பை, சான்றிதழ் பரிசு வழங்கி பாராட்டினார்.

விழாவில் திரளான விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

போட்டி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் டி.ஜான்வசீகரன், பொருளாளர் செயின்ட் ரவிராஜன் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.


Next Story