மீன் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட மொத்த மற்றும் சில்லரை மீன் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட மொத்த மற்றும் சில்லரை மீன் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் துரைபாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குழந்தைவேல், செயலாளர் அண்ணாமலை, துணை செயலாளர் தாரிக், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பீதாம்பரம், கனகராஜ், சத்யராஜ், சிவானந்தம், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அனிச்சம்பாளையத்தில் புதியதாக கட்டியுள்ள மீன் மார்க்கெட்டில் அரசுக்கு இழப்பு ஏற்படாத வகையில் பொது டெண்டர் விடப்பட வேண்டும், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் தற்காலிகமாக இயங்கி வரும் மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய சென்னை நெடுஞ்சாலை குப்பை கிடங்கு அருகில் மற்ற சங்கத்திற்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் எங்கள் சங்கத்தின் கடிதம் மூலமாக மட்டுமே நகராட்சியில் இருந்து கடை ஒதுக்கி தருவதாக கூறியுள்ளனர். ஆனால் இதுநாள் வரை கடைகளோ, இடமோ அதிகாரப்பூர்வமாக ஒதுக்கவில்லை என்பதால் எங்கள் சங்கத்திற்கு உடனடியாக இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.