மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு நிவாரண உதவி


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  ஆதிவாசி மக்களுக்கு நிவாரண உதவி
x
தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 16 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு நிவாரண உதவி

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் தாலுகா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, வெள்ளேரிசோலாடி, விளக்கலாடி ஆறுகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளிலும் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் உப்பட்டி அருகே சேலக்குன்னு ஆதிவாசிகாலனிக்குள் மழைவெள்ளம் புகுந்தது. மேலும் வீடுகளும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் குடியிருக்க முடியாமல் ஆதிவாசி மக்கள் அவதிப்படுகின்றனர். இந்தநிலையில் இதனால் பந்தலூர் வருவாய்துறை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. பந்தலூர் தாசில்தார் நடேஷன் நிவாரண பொருட்களை வழங்கினார். இதேபோல் பழுதான வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தேவையான உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில் வருவாய் ஆய்வாளர் தேவாராஜ், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story