காசி விஸ்வநாதர் கோவிலில் பூச்சொரிதல் விழா


காசி விஸ்வநாதர் கோவிலில் பூச்சொரிதல் விழா
x

காசி விஸ்வநாதர் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூரில் குறிஞ்சான் குள தெருவில் உள்ள பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பூக்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக மேலத்தெரு, பெரம்பலூர் சாலை, சத்திரம் வழியாக மேளம் முழங்க கோவிலுக்கு வந்தனர். பின்னர் காசி விஸ்வநாதருக்கு பக்தர்கள் கொண்டு வந்த பூக்களை கொண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story