உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு


உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு
x

உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் நகரின் பல்வேறு பகுதிகளில் தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரம் குறித்து எழுந்த புகார்களின் அடிப்படையில், உணவில் சேர்க்கப்படும் கலர் மற்றும் உணவுகளின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி நான்கு ரோடு, அண்ணா சிலை, காந்தி சிலை, அக்னி பஜார், சிவகங்கை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு நடைபெற்றது. இதில் உணவு விற்பனை உரிமம் இல்லாமல் சில கடைகள் நடத்துவது தெரியவந்தது. மேலும் தரமில்லாத சிக்கன், மீன்கள், பாணி பூரி, எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர்.

மேலும், இதுபோன்று தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.



Next Story