சி.பி.எஸ்.சி.பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி

சி.பி.எஸ்.சி.பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி யில் ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி அணி முதலிடம் பிடித்துள்ளது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டி சாகுபுரம் டி.சி. டபிள்யூ மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 3 மாவட்டங்களில் உள்ள 18 பள்ளிகளின் அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில் கன்னியாகுமரி செயின்ட் ஜோசப் பள்ளி அணியும் ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி அணியும் மோதின. ஆட்ட நேர இறுதிவரை இரு அணிகளும் கோல் போடவில்லை. இதனால் பெனால்ட்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் தலா நான்கு கோல்கள் போட்டதால் சடன் டெத் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
அதில் பேர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சாகுபுரம் தொழிற்சாலை மூத்த செயல் உதவி தலைவர் ஜி. ஸ்ரீனிவாசன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி அணி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும் போட்டியில் வென்ற பெர்ல்ஸ் பள்ளி அணி வீரர்களையும், பயிற்சியாளர்களையும் பள்ளி தாளாளர் பி. சுப்பையா, பொதுமேலாளர் எஸ்.மபத்லால், முதல்வர் கிறிஸ்டினா பிரபாகரன், துணை முதல்வர் முத்து ஜா மற்றும் பயிற்சியாளர் ஆமின், உடற்பயிற்சி ஆசிரியர்கள் தேவஆசீர், ஜெயக்குமார் ஆகியோர் பாராட்டினர்.