கோவில்பட்டியில்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி


கோவில்பட்டியில்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட அளவில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர் களுக்கான கால்பந்து போட்டி நடந்தது. போட்டியில் 13 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் அணியும், கோவில்பட்டி அப்துல் கலாம் அணியும் மோதியது. இதில் காயல்பட்டினம் அணி 5 - 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3 மற்றும் 4 வது இடத்திற்கான போட்டியில் நெல்லை பெல்ஸ் பள்ளி அணியும், கோவில்பட்டி எடுஸ்டர் பள்ளி அணியும் மோதியது. இதில் நெல்லை அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ. பி. கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் கண்ணப்பன் ெவற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்க துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபால், பொருளாளர் சுரேஷ் குமார், பள்ளி பொருளாளர் கண்ணன், கமிட்டி உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story