ரேஷன் அரிசி கடத்தியவர் மீது 9-வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது

ரேஷன் அரிசி கடத்தியவர் மீது 9-வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் போலீஸ் இன்ஸ்பெக் டர் விவேகானந்தன் உத்தரவின்பேரில் போலீசார் கோவை- செல்வபுரம் பைபாஸ் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் லாரியில் கேரளாவிற்கு 3 டன் ரேஷன் கடத்தி செல்வது தெரியவந்தது.
இது தொடர்பாக உக்கடம் அண்ணாநகரை சேர்ந்த அபிப் ரகுமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் அவர் தலைமறைவானார். இந்த நிலையில் அபிப் ரகுமானை கடந்த 12-ந் தேதி பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் பேரூர் அருகே கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அபிப் ரகுமானை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி கோவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அபிப்ரகுமானை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதற்கான உத்தரவு நகலை கோவை மத்திய சிறையில் உள்ள அபிப் ரகுமானிடம் போலீசார் வழங்கினர். அபிப் ரகுமான் ஏற்கனவே 8 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றனர்.
தற்போது 9-வது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.