கள்ளக்காதலியின் மகள், மகனுக்கு பாலியல் தொல்லை

அருமனை அருகே கள்ளக்காதலியின் மகள், மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி மீது போலீசார் ேபாக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை:
அருமனை அருகே கள்ளக்காதலியின் மகள், மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி மீது போலீசார் ேபாக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவரை பிரிந்த பெண்
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் உண்ணி என்கிற டிஜேஷ் (வயது38). தொழிலாளியான இவருக்கும் அருமனை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 15 வயதுடைய ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இதையடுத்து டிஜேஷ் அருமனை பகுதிக்கு வந்து அந்த பெண்ணுடன் வசித்து வந்தார். அவர்களுடன் பெண்ணின் தாயாரும் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண் தனது குழந்தைகளை விட்டுவிட்டு வேறொரு வாலிபருடன் சென்றார். அதன்பின்பு குழந்தைகளை டிஜேசும், பெண்ணின் தாயாரும் கவனித்து வந்தனர்.
பாலியல் தொல்லை
இந்த நிலையில் டிஜேஷ் கள்ளக்காதலியின் மகளான 15 வயது சிறுமிக்கும், சிறுமியின் தம்பிக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சிறுமி தனது பாட்டியிடம் கூறி அழுதார். அதற்கு பாட்டி, 'வெளியே சொல்ல வேண்டாம்' என்று கூறி டிஜேசுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று டிஜேஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண் பார்த்தார். அவர் டிஜேசை தட்டி கேட்டுள்ளார். உடனே, டிஜேஷ் அந்த பெண்ணிடம் தகராறு செய்தார்.
பாட்டி மீதும் வழக்குப்பதிவு
இதையடுத்து சிறுமி பக்கத்து வீட்டு பெண்ணின் உதவியுடன் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் டிஜேஷ் தனக்கும், தனது தம்பிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில் டிஜேஷ் மீதும், சிறுமியின் பாட்டி மீதும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.