பள்ளிக்கூட புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா


பள்ளிக்கூட புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
x

சேரன்மாதேவி அருகே பொட்டல் ஊராட்சியில் பள்ளிக்கூட புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி யூனியனுக்கு உட்பட்ட பொட்டல் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.29 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை குமார் தலைமை தாங்கி, புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்லெட்சுமி, பொட்டல் கிராம பஞ்சாயத்து தலைவர் மாரிச்செல்வி, துணைத் தலைவர் அரிராம் சேட், ஒன்றிய பொறியாளர் அம்மையப்பன், தலைமை ஆசிரியர் முத்துச்செல்வி, சேரன்மாதேவி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் மூலச்சி சீவலமுத்து குமார், பூதத்தான், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சொரிமுத்து, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story