துணை வேளாண் விரிவாக்க மைய உரக்கிடங்கு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

மணல்மேட்டில், ரூ.38 லட்சத்தில் துணை வேளாண் விரிவாக்க மைய உரக்கிடங்கு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
மணல்மேடு:
மணல்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் வாங்குவதற்காக 20 கி.மீ. தொலைவில் உள்ள மயிலாடுதுறை பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. மணல்மேடு பகுதியில் உரக்கிடங்கு அமைக்க வேண்டும் என ராஜகுமார் எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று மணல்மேட்டில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண் விரிவாக்க மைய உரக்கிடங்கு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு் விழா நடைபெற்றது. விழாவில் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், பேரூராட்சி தலைவர் கண்மணிஅறிவடிவழகன், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா, உதவி பொறியாளர் செந்தில்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் சுப்பிரமணியன், 15-வது வார்டு கவுன்சிலர் சாவித்திரி தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.