செய்துங்கநல்லூரில்ரூ.4 கோடியில் புதியயூனியன் அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா


செய்துங்கநல்லூரில்ரூ.4 கோடியில் புதியயூனியன் அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செய்துங்கநல்லூரில்ரூ.4 கோடியில் புதியயூனியன் அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

செய்துங்கநல்லூரில் ரூ.4 கோடியில் புதிய யூனியன் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.

அடிக்கல் நாட்டு விழா

செய்துங்கநல்லூரில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய யூனியன் அலுவலக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். விழாவுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழாவில் கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கருங்குளம் யூனியன் தலைவர் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கியலீலா, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரபிரபு, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் மைதிலி, தி.மு.க. மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரி சங்கர், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவி

ஸ்ரீவைகுண்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் தேவர் ஜெயந்தி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ் தேவர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் மணி தேவர் வரவேற்றார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன், துணைத் தலைவர் சண்முகசுந்தரம், நல்லூர் பஞ்சாயத்து தலைவர் பரிசமுத்து, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் கொம்பையா, அரசு வழக்கறிஞர் ஷாஜகான், பார்வர்டு பிளாக் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம், மாநில மாணவர் அணி செயலாளர் கொம்பையா பாண்டியன், மாவட்ட தலைவர் சிவராம் கார்த்திக், மாவட்ட நிதி செயலாளர் துரை சரவணண், மாவட்ட செயலாளர் உடையார் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பயனாளிகள் 18 பேருக்கு தையல் எந்திரம், 500 பேருக்கு வேட்டி, 1000 பெண்களுக்கு சேலை, 10 பேருக்கு அயன்பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில இந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஒன்றிய செயலாளர் சகாயம் நன்றி கூறினார்.


Next Story