வைப்புத்தொகை, சேமிப்பு கணக்கில் ரூ.18 ஆயிரம் மோசடி

வைப்புத்தொகை, சேமிப்பு கணக்கில் ரூ.18 ஆயிரம் மோசடி செய்த போஸ்ட் மாஸ்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை
செங்கம் தாலுகா மணிக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகன்.
இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் கீழ்பென்னாத்தூர் மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதி திருவண்ணாமலை தபால் கோட்ட உதவி கண்காணிப்பாளர் சாமிநாதன் மலப்பாம்பாடி தபால் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது போஸ்ட் மாஸ்டர் முருகன் ரூ.18,777 கையாடல் செய்தது தெரியவந்தது.
முருகன் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலரிடம் வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு போன்றவை தொடங்க வைத்து அவர்களிடம் பணம் பெற்று, அதை அவர்களுடைய கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சாமிநாதன் கீழ்பென்னாத்தூர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story