மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

மாணவ- மாணவிகளுக்கு தேவராஜி எம்.எல்.ஏ.இலவச சைக்கிள் வழங்கினார்.
ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மல்லப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி, ஜெயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதுப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 30 இருக்கை மற்றும் மேசையும், புதுப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 50 இருக்கை மற்றும் மேசையையும், மல்லப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 50 இருக்கை மற்றும் மேசையையும், ஜெயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 25 இருக்கை மற்றும் மேசையையும் வழங்கினார். முன்னதாக அம்மணாங்கோவில் ஊராட்சி காட்டூர் பகுதியில் புதிய பகுதி நேரரேஷன் கடையை ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட துணை செயலாளர் ஆ.சம்பத்குமார், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யாசதீஷ்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.