இலவச கண் சிகிச்சை முகாம்

திருமங்கலம் ஜெயம் அரிமா சங்கம் மதுரை ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை மற்றும் கப்பலூர் அரசு மற்றும் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் கப்பலூர் காந்தி நகர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.
திருமங்கலம்
திருமங்கலம் ஜெயம் அரிமா சங்கம் மதுரை ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை மற்றும் கப்பலூர் அரசு மற்றும் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் கப்பலூர் காந்தி நகர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. ஜெயம் அரிமா சங்க நிறுவனர் ஜெயின்ட் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். உச்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள், கல்லூரி முதல்வர் லட்சுமி, துணை முதல்வர் ஹரிநாராயணன், கண் மருத்துவர் விசாலாட்சி, டாக்டர் முகமது ஆசிக் உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் முன்னிலை வகித்தனர். ஜெயம் அரிமா சங்கத்தின் பட்டய தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் வரவேற்றார். முகாமை மதுரை மாவட்ட முதலாம் துணை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரிமா மாவட்ட முன்னாள் அமைச்சரவை செயலாளர் லசந்திர மகேந்திர மவுலி, ஜெயம் அரிமா சங்க தலைவர் கிருஷ்ண குமார், அரிமா மூத்த உறுப்பினர்கள் திருமூர்த்தி, கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தீபா வாழ்த்துரை வழங்கினார்கள். முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டை உச்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாப்பம்மாள் மற்றும் ஊராட்சி மன்ற செயலர் ஈஸ்வரன் செய்திருந்தனர்.