புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் 3 ஏழைஜோடிகளுக்கு இலவச திருமணம்


புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் 3 ஏழைஜோடிகளுக்கு இலவச திருமணம்
x

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் 3 ஏழைஜோடிகளுக்கு இலவச திருமணம்

தஞ்சாவூர்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் 3 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. மேலும் ரூ.20 ஆயிரம் மதிப்பில் 2 கிராம் தங்கம் மற்றும் 30 வகையான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.

3 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 500 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தஞ்சை மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்குட்பட்ட தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று 3 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்தை எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் தாலியை எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

சீர்வரிசை பொருட்கள்

புதுக்கோட்டையை சேர்ந்த நவீன், தஞ்சையை சேர்ந்த சுதாவுக்கும், நெய்வாசல் பகுதியை சேர்ந்த பிரபுதேவா, நா.குடிகாட்டை சேர்ந்த நந்தினிக்கும், பாபநாசத்தை சேர்ந்த பழனிசாமி, கமலா ஆகியோருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும் மணமக்களின் வீட்டார்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.

இதில் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்ற ஜோடிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

கிரைண்டர்- மிக்சி

இதில் 2 கிராம் தங்கம், மணமகன், மகளுக்கு வேட்டி- சேலை, குத்துவிளக்கு, காமாட்சி விளக்கி, கிரைண்டர், மிக்சி, மற்றும் பாத்திரங்கள், வாழைத்தார். இனிப்பு வகைகள் போன்றவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் சூரியநாராயணன், உதவி ஆணையர்கள் நாகையா, கவிதா, கண்காணிப்பாளர்கள் சந்திரசேகரன், பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர்கள் ரெங்கராஜன், செந்தில் கலந்து கொண்டனர்.


Next Story