கோவில்பட்டியில் திங்கட்கிழமை முதல்நகராட்சி தினசரி சந்தை இயங்காது


கோவில்பட்டியில் திங்கட்கிழமை முதல்நகராட்சி தினசரி சந்தை இயங்காது
x

கோவில்பட்டியில் திங்கட்கிழமை முதல் நகராட்சி தினசரி சந்தை இயங்காது என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை ரூ 6.84 கோடி செலவில் 251 கடைகளுடன் புதிதாக கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்கு தினசரி சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் முறையீடு செய்தார்கள்.

இந்நிலையில் நேற்று மாலையில் நகராட்சி தினசரி சந்தை நுழைவு வாயில் முன்பு நகராட்சி ஆணையாளர் சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சந்தை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்ச் 31-ந்தேதி தீர்ப்பாணையின்படி கடந்த ஏப்.14-ந் ேததியுடன், தினசரி சந்தையில் வணிகர்கள், வணிகம் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைகிறது.

எனவே இன்று (திங்கட்கிழமை) முதல் தினசரி சந்தை இங்கு இயங்காது, என தெரிவித்துள்ளார்.


Next Story