ராஜபாளையத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

ராஜபாளையத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைெபற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைெபற்றது.
விநாயகர் சிலைகள்
ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல 35-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா நேற்று நடைபெற்றது.
இதையடுத்து மாலையில் மும்பை சித்தி கணபதி, வல்லப கணபதி, சுபக்ருது கணபதி, ஹேரம்ப கணபதி, உச்சிஷ்ட கணபதி சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மதுரை சாலை, பழைய பஸ் நிலையம், தென்காசி சாலை, காந்தி கலை மன்றம் விலக்கு, சொக்கர் கோவில், திருவனந்தபுரம் தெரு வழியாக இந்த ஊர்வலம் சென்று ஐ.என்.டி.யு.சி. நகர் எதிரே உள்ள கருங்குளத்தில் அனைத்து சிலைகளும் போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு வழிபாடு நடத்தி கரைக்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
ஊர்வலத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, காவல் பயிற்சி கல்லூரி துணை முதல்வர் முகேஷ் ஜெயக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பரண்டுகள் சபரிநாதன், பாபு பிரசாத் (சிவகாசி) மற்றும் ஆயுதப்படை சிறப்பு காவல் படை வீரர்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை தர்மபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நற்பணி மன்ற தலைவர் ராம்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.