யூனியன் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் முற்றுகை


யூனியன் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் முற்றுகை
x

யூனியன் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி யூனியன் அலுவலகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புகைப்படம் வைக்க வேண்டும் என கொட்டாம்பட்டி பா.ஜ.க.வினர் மாவட்ட பொது செயலாளர் சந்தோஷ் சுப்பிரமணியன் தலைமையில் மாநில துணைத்தலைவர் கந்தசாமி, மண்டல தலைவர் மனோகரன், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மண்டல பார்வையாளர் மகேந்திரபிரபு, மகளிர் அணி மாவட்ட தலைவர் மஞ்சுளா, நிர்வாகி நவராஜ் உட்பட ஏராளமானோர் கொட்டாம்பட்டி யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் யூனியன் ஆணையாளர் செல்லப்பாண்டியை சந்தித்து அலுவலக அறையில் ஜனாதிபதி புகைப்படத்தை வைக்க வேண்டுகோள் விடுத்தனர். ஆணையாளர் மறுத்ததால் பா.ஜ.க. நிர்வாகிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து கொட்டாம்பட்டி போலீசார் விரைந்து வந்து சமாதானப் படுத்தினர். பின்னர் யூனியன் ஆணையாளர் ஜனாதிபதியின் புகைப்படத்தை அலுவலகத்தில் வைக்க சம்மதம் தெரிவித்து படத்தை பெற்றுக்கொண்டார்.இதனை தொடர்ந்து பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர்.


Next Story