எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூரில் நாளை நடக்கிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக எரிவாயு (கியாஸ் சிலிண்டர்) நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணியளவில் அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் கியாஸ் சிலிண்டர் தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story