கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் எரிவாயு நுகர்வோர் சங்க நிர்வாகிகள் வெளிநடப்பு


கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் எரிவாயு நுகர்வோர் சங்க நிர்வாகிகள் வெளிநடப்பு
x

கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் எரிவாயு நுகர்வோர் சங்க நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் கூட்டம் கடந்த 3 மாதங்களாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நுகர்வோர் சங்கத்தினர் இக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் நுகர்வோர் சங்க நிர்வாகத்தினரிடம் வருவாய் கோட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் கூட்டம் திருவண்ணாமலை தாலுகா அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர் தாலுகாக்களை சேர்ந்த நுகர்வோர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் மாலை 4 மணி வரை அதிகாரிகள் கூட்டத்திற்கு வராததால் நுகர்வோர் சங்கத்தினர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து தாலுகா அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story