கோபி உழவர் சந்தையில் செப்டம்பர் மாதத்தில் ரூ.79¾ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை


கோபி உழவர் சந்தையில்   செப்டம்பர் மாதத்தில்  ரூ.79¾ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
x
தினத்தந்தி 2 Oct 2022 1:00 AM IST (Updated: 2 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோபி உழவர் சந்தை

ஈரோடு

கோபி அருகே உள்ள மொடச்சூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு கோபி, நாதிபாளையம், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், வெள்ளாங்கோவில், சுண்டப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், பூக்கள் ஆகியவைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் 839 விவசாயிகள் காய்கறிகளைக் கொண்டு வந்தனர். மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 430 கிலோ காய்கறிகள் 79 லட்சத்து 65 ஆயிரத்து 607 ரூபாய்க்கு விற்பனையானது.

மேற்கண்ட தகவலை கோபி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story