லாரி மீது அரசு பஸ் மோதல்; 5 பேர் காயம்


லாரி மீது அரசு பஸ் மோதல்; 5 பேர் காயம்
x

லாரி மீது அரசு பஸ் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர்.

திருச்சி

திருச்சி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து(வயது 50). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் சென்னை-மதுரை புறவழிச்சாலையில் அரசு பஸ்சை ஓட்டிச்சென்றார். திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் வந்தபோது முன்னால் சிமெண்டு ஏற்றிச்சென்ற லாரி மீது அந்த பஸ் மோதியது. இதில் அந்த லாரியின் டிரைவர் மதுரை மாவட்டம் சித்தலகுடி வடக்குத்தெருவை சேர்ந்த பாலு உள்பட அந்த லாரியில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story