அரசு அதிகாரிகள் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும்


அரசு அதிகாரிகள் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும்
x

மழை வெள்ள பாதிப்பின் போது அரசு அதிகாரிகள் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

மழை வெள்ள பாதிப்பின் போது அரசு அதிகாரிகள் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அரசு அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் வேதாரண்யம் செம்போடையில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசுகையில், பருவமழையின் போது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து காலதாமதம் இல்லாமல் உணவு அளிக்க வேண்டும்.

கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும்

பாதுகாப்பு முகாமில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.ஆஸ்பத்திரிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ளபாதிப்பின் போது அரசு அதிகாரிகள் கடமை உணர்வோடும், மனசாட்சியோடும் செயல்பட வேண்டும் என்றார்.

இதில் மாவட்ட அலுவலர் சகிலா, வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜி, பாஸ்கர், அண்ணாதுரை, வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story