அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கூட்டம்


அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கூட்டம்
x

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கூட்டம் நடந்தது.

நாமக்கல்

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் சார்பில் டி.ஏ. உயர்வு மீட்பு குழு ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. குழு நிர்வாகி மாரிமுத்து தலைமை தாங்கினார். பழனியப்பன் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் கதிரேசன், மருதமுத்து, ராகவேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் 79 மாத அகவிலைப்படி நிலுவையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். கடந்த மே மாதம் வரை ஓய்வு பெற்ற அனைவருக்கும், இறந்த பணியாளர்கள் குடும்பத்தினருக்கும், ஓய்வு கால பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். 15 ஆண்டுக்கு மேலாக வழங்காமல் உள்ள வாரிசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆறுமுகம் நன்றி கூறினார்.


Next Story