டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூரில் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூரில் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன்

பத்திரிகை, கல்வி, ஆன்மிகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பிரம்மசக்தி, செல்வகுமார், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராஜபாண்டி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாணசுந்தரம், உடன்குடி கூட்டுறவு சங்க தலைவர்கள் அசாப் கல்லாசி, முத்துராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் பரமன்குறிச்சி இளங்கோ, சதீஷ், ஜோசப், கோட்டாளம், நவீன், நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுகு, உடன்குடி நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பாலாஜி, ஆவித், சரஸ்வதி பங்காலன், தமிம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா, பொதுக்குழு உறுப்பினர் முத்துசெல்வம், குலசை இளைஞரணி அமைப்பாளர் ரம்சான் உள்பட பலர் கலந்து கொண்டனர். ெதாடந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அரசு சார்பில் மரியாதை

தமிழக அரசு சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வருவாய் ஆய்வாளர் மணிகண்டவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வலிங்கம், வேல் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story