பள்ளியில் புதிய வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

உடையார்பட்டி பள்ளியில் புதிய வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்துக்குட்பட்ட உடையார்பட்டி ரெங்கநாதன் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ.54 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின், இளநிலை பொறியாளர் ரமேஷ், கவுன்சிலர் கோகிலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story