உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி


உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
x

ஈரோட்டில் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கி வைத்தாா்.

ஈரோடு

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி, ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் நாகரத்தினம், கணேசமூர்த்தி எம்.பி., ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த திட்டத்தின் நோக்கம் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ -மாணவிகள் தங்கள் எதிர்கால கனவை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதை அறிந்து கொள்வது ஆகும். மேலும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பு முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்களை புகழ்பெற்ற வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஊராட்சிக்குழு தலைவர் நவமணி, துணை மேயர் செல்வராஜ், முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அதிகாரி ஜோதிசந்திரா, வேளாளர் கல்லூரி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் மற்றும் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டார்கள்.


Next Story