குருநாதசுவாமி-அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில்மகா சிவராத்திரி உற்சவ திருவிழா


குருநாதசுவாமி-அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில்மகா சிவராத்திரி உற்சவ திருவிழா
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் குருநாதசுவாமி-அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் தெற்கு யாதவர்தெருவில் மாதாங்கோவில் என்றுஅழைக்கப்படும் குருநாதசுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி உற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. 9-ம் நாள் முககாப்பு திருவிழாவும், இரவு 10மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, அம்மன் முகம் தேரில் வீதி உலா வந்து நள்ளிரவு 1 மணிக்கு மேல் அம்மன் முகம் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது. 10-ம்நாள் மகாசிவராத்திரி அன்று காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும் நடக்கிறது. மாலை 6மணிக்கு திருவிளக்கு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் தேரில் வீதி உலா நிகழ்ச்சியும், இரவு 3மணிக்கு 4-வது கால பூஜை நடக்கிறது.


Next Story