ஓட்டலில் தவறவிட்ட ரூ.50 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ஓட்டலில் தவறவிட்ட ரூ.50 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ஓட்டல் வைத்து நடத்தி வருபவர் அஜய். சம்பவத்தன்று இவரின் ஓட்டலில் சாப்பிட வந்த யாரோ ஒருவர் பையை விட்டுவிட்டு சென்றுள்ளார். அதனை அறிந்த அஜய் பையை பார்த்த போதுஅதில் ரூ.50 ஆயிரம் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் அந்த பணத்தை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி பணப்பையை மறந்து விட்டுசென்ற தூத்துக்குடி மாவட்டம் இடையன்விளையை சேர்ந்த பாலமுருகன் என்பவரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வரவழைத்து, துணை கமிஷனர் சீனிவாசன் முன்னிலையில் பணத்தை வழங்கினர். அப்போது மேலப்பாளையம் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story